உங்கள் ஸ்மார்ட்போன் காணாமல் போனால் அதை கண்டுபிடித்து லாக் செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன் என்பது மனிதர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள், மேலும் பல தரவுகளை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருப்போம்.
எனவே, ஸ்மார்ட்போன் தொலைந்து போவதை நிச்சயம் தாங்கி கொள்ள முடியாது. அப்படி ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் எளிதாகக் கண்டுபிடிக்கவும் மற்றும் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் அதில் உள்ள தரவுகளை எப்படி அழிப்பது எப்படி என காண்போம்.
தொலைந்து போன ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க முதலில் நீங்கள் android.com/find என்கிற லிங்க்கை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும். இதில் உங்களின் கூகுள் அக்கவுண்ட் பயன்படுத்த வேண்டும்.
GETTY
அடுத்ததாக, உங்களின் மொபைல் பற்றிய தகவல்கள் மேல்புறத்தில் தோன்றும். பிறகு தொலைந்து போன மொபைலில் நீங்கள் லாகின் செய்துள்ள கூகுள் அக்கவுண்ட் விவரத்தை உள்ளிடவும்.
பிறகு தொலைந்து போன மொபைலில் நோட்டிபிகேஷன் வரும். பின்னர், திரையில் காணப்படும் மேப் மூலம் உங்கள் மொபைல் எங்கே உள்ளது என்பதை அறிய முடியும். அதாவது கடைசியாக உங்கள் மொபைல் எங்கு இருந்ததோ அந்த இடத்தின் லொகேஷன் அதில் காட்டப்படும்.
business insider
ஒருவேளை அந்த இடத்தில் மொபைல் இல்லையென்றால் உடனடியாக Lock and erase என்கிற ஆப்ஷனை எனேபிள் செய்து விடுங்கள். பிறகு, உங்கள் மொபைலில் 5 நிமிடம் ரிங் அடிக்கப்படும்.
இதை Play Sound என்கிற ஆப்ஷன் பயன்படுத்தி செய்யலாம். உங்களின் தொலைந்து போன மொபைலில் உள்ள தரவுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழிப்பதற்கு Erase device என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து போனில் உள்ள எல்லாவற்றையும் நீக்கி விடுலாம்.
ஆனால் மெமரி காரட்டில் உள்ள தரவுகளை அழிக்க இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
zeenews