கனடாவில் வெளிநாட்டவர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்! அவற்றின் சிறப்பம்சங்கள்
கனடா நாட்டில் வெளிநாட்டிலிருந்து வரும் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனை பற்றிய கூடுதல் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்களை அழைக்கும் கனடா
கனடா நாட்டில் உலக நாட்டு மக்கள் பலரும் குடிபெயர்கிறார்கள், குறிப்பாக புலம் பெயர்ந்தோர் தங்கள் வாழ்க்கையை துவங்க, கனடா ஒரு பாதுகாப்பான நாடாக பார்க்கப்படுகிறது.
@Dreamstime.com
மேலும் கனடாவில் வெளி நாட்டிலிருந்து, வரும் நபர்களுக்கு சிறப்பு சலுகையும், கூடுதல் அங்கிகாரமும் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம் பிற நாடுகளிலிருந்து வரும் மக்களை, தங்களது சொந்த நாட்டினரை போல உணர செய்வதில் கனடா முதன்மையாக நாடாக, திகழ்கிறது.
வேலை வாய்ப்புகள்
கனடா பல கலாச்சாரம் கலந்த, மதச்சார்பற்ற நாடாக இருப்பதால் வெளிநாட்டவர்கள் எளிமையான வாழ்க்கையை, இங்கு வாழ தகுதியான நாடாக கருதப்படுகிறது.
@torranto star
www.canada.ca என்ற கனேடிய அரசு அதிகாரப்பூர்வ பக்கத்தில், கனடாவிற்கு புலம்பெயர்வது தொடர்பாக நிறைய தகவல்கள் குவிந்துள்ளது. மேலும் அந்நாட்டிற்கு ஊழியர்களாக பணிபுரிவதற்கும், நல்ல தொழில் முதலீடு செய்வதற்கும், உகந்த நாடாக கனடா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊழியர்களுக்கு தேவையான நேரத்தில் விடுமுறை, குழுந்தைகளுக்கான சலுகைகள், ஓய்வூதியம், போன்ற சிறப்பம்சங்கள் நிறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
@getty images
மேலும் போரில் பாதிக்கப்பட்ட நாடுகளான சூடான், உக்ரைன் நாட்டு அகதிகளுக்கு கனடா முன்னுரிமை, அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கல்வி பயில வரும் மாணவர்கள், பகுதி நேர வேலை செய்து கொண்டே கல்வி பயில முடியும், என்ற சூழலை உருவாக்குகிறது.