மெகாலி டெஸ்டில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சுவாரஸ்ய சம்பங்கள் - என்னென்ன தெரியுமா?
இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஏராளமான விஷயங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கவுள்ளது.
இதனிடையே இந்திய அணியை நம்பர் 1 அணியாக கொண்டு சென்ற முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இந்த போட்டி 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டி இலங்கை அணியின் சரித்திரத்தை மாற்றி அமைக்கலாம். அந்த அணி விளையாடப்போகும் 300வது டெஸ்ட் போட்டியாகும்.
இதுவரை இந்திய மண்ணில் இந்திய அணியை இலங்கை ஒரு முறை கூட தோற்கடித்தது கிடையாது. மேலும் கடந்த 7 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் வெற்றியை கூட இந்தியாவுக்கு எதிராக பெறவில்லை.
ரோகித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படவுள்ள முதல் போட்டி இதுவாகும். தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி தோற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பின் தங்கியுள்ளது.