ஜெனீவா முழுவதும் ஏராளமான உளவாளிகள்... சுவிஸ் உளவுத்துறை தெரிவித்துள்ள பரபரப்புத் தகவல்
சுவிஸ் பெடரல் உளவுத்துறை அமைப்பின் தலைவர், ஜெனீவா ரஷ்ய உளவாளிகளின் நடவடிக்கைகளின் மையமாக காணப்படுவதாகவும், ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிக அளவில் இருப்பதாகவும் பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளார்.
பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த சுவிஸ் பெடரல் உளவுத்துறை அமைப்பின் தலைவரான Christian Dussey, தூதரகப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெயரில், ஜெனீவாவில் ஏராளம் ரஷ்ய உளவாளிகள் செயல்பட்டுக்கொண்டிருப்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
ஆனால், உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து அவர்களால் நாட்டுக்கு இருக்கும் அபாயத்தின் அளவு அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ளார் Dussey.
இஸ்லாமியவாத தீவிரவாதத்தைப் பொருத்தவரை, இன்னமும் அதன் மூலம் அதிக அளவில் அபாயம் இருக்கத்தான் செய்கிறது என்று கூறும் Dussey, ஆனால், குழுவாக செயல்படுபவர்களைவிட, இப்போது தனியாக செயல்படுபவர்களால்தான் அச்சுறுத்தல் என்கிறார்.