மின்னஞ்சல் மூலம் லொட்டரி பரிசு அறிவிப்பு.., மோசடி என நிராகரித்த அமெரிக்க முதியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
லொட்டரி பரிசு வென்றதாக மின்னஞ்சல் வந்ததை நிராகரித்த அமெரிக்காவில் உள்ள முதியவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
இ-மெயில்
அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் நகரை சேர்ந்த 67 வயதான முதியவர் ஒருவருக்கு ஒன்லைன் லொட்டரியில் பரிசு கிடைத்துள்ளது. அங்குள்ள கலமாசு கவுண்டி பகுதியை சேர்ந்த ஒருவர் ஒன்லைன் கேமிங் மூலம் லொட்டரியில் விளையாடியுள்ளார்.
அப்போது அவர் 2 ரவுண்டுகளில் வெற்றி அடைந்துள்ளார். அதனால், வெற்றி பற்றிய அறிவிப்பு விபரம் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. ஆனால், முதலில் மெயிலில் வந்த தகவலை பார்த்த முதியவர் மோசடி என நிராகரித்துள்ளார்.
பரிசுத்தொகை
இதன் பிறகு மின்னஞ்சலில் வந்த தகவலை உண்மைதானா என்று சரிபார்ப்பதற்காக மிக்சிகன் லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது தான் இவருக்கு உண்மையாகவே 4 லட்சம் டொலர் பரிசுத்தொகை வென்றது தெரிந்துள்ளது.
இது பற்றி முதியவர் கூறுகையில், "நான் ஒன்லைனில் அதிகமான கேம்கள் விளையாடுகிறேன். 2 -வது உள்ளீடு பற்றி எனக்கு தெரியாது. மிக்சிகன் லொட்டரியில் இருந்து இரண்டாவது பரிசாக 4 லட்சத்து 16 ஆயிரத்து 322 டொலர் பரிசை வென்றதாக மின்னஞ்சல் வந்தது.
முதலில் அதனை மோசடி என நிராகரித்தேன். அதன் பின், நிறுவனத்தை தொடர்பு கொண்டு தான் உறுதி செய்தேன். இந்த பரிசுத்தொகையை எனது குடும்பத்தினருக்காக செலவு செய்யவும், சேமிக்கவும் உள்ளேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |