நண்பர்கள் குழுவாக வாங்கிய லொட்டரிக்கு விழுந்த பரிசு... கனேடியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஒன்ராறியோவைச் சேர்ந்த பீட்சா டெலிவரி செய்யும் ஒருவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்த நிலையில், அவரது பங்கை அவருக்குக் கொடுக்காமலே ஏமாற்றியிருக்கிறார்கள் அந்த ‘நண்பர்கள்’!
ஒன்ராறியோவின் விண்ட்சரைச் சேர்ந்த Philip Tsotsos, தன் நண்பர்கள் 16 பேருடன் சேர்ந்து லொட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார். வழக்கமாகவே அவர்கள் அப்படி சேர்ந்து லொட்டரிச் சீட்டு வாங்குவதுண்டாம்.
அப்படி நண்பர்கள் கடந்த ஜூன் மாதம் ஒரு லொட்டரிச் சீட்டு வாங்கியிருக்கிறார்கள்.
ஒரு நாள் நண்பர்களுக்கு இலவசமாக பீட்சா வழங்கியிருக்கிறார் Philip. சிறிது நேரத்தில் சமூக ஊடகம் ஒன்றில் வெளியான ஒரு புகைப்படத்தில், தனது நண்பர் ஒருவர், தான் சற்று முன் இலவசமாகக் கொடுத்த பீட்சாவை உண்டபடி கையில் ஒரு மில்லியன் டொலர்களுக்கான லொட்டரிச் சீட்டு ஒன்றை வைத்திருப்பதைக் கவனித்திருக்கிறார் Philip.
ஆனால், அந்த 16 பேருமாக அந்த லொட்டரியில் விழுந்த பரிசை பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள், Philipக்கு எதுவும் கொடுக்கவில்லை.
கேட்டதற்கு Philip அந்த லொட்டரி விளையாட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார்கள் அந்த நண்பர்கள்.
நான் அவர்களை என் குடும்பமாக நினைத்தேன், அவர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்கிறார் Philip.
ஆகவே, நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ள Philip, தன்னை அந்த லொட்டரி வாங்கிய குழுவில் ஒருவர் என அறிவிக்கவேண்டும் என்று கோரியும், 70,000 டொலர்கள் இழப்பீடு கோரியும் வழக்குத் தொடர உள்ளார்.