கனடாவில் சாலையில் அழுதபடி சென்ற புலம்பெயர்ந்த பெண்! பல கோடி பணம் கைக்கு வந்த மகிழ்ச்சியே காரணம்
கனடாவில் லொட்டரியில் பெரிய பரிசை வென்ற மகிழ்ச்சியில் பெண் ஒருவர் வீட்டிற்கு செல்லும் வழி முழுவதும் அழுது கொண்டே சென்றதாக கூறியுள்ளார்.
ஒன்றாறியோவை சேர்ந்த Shirley Broomfield என்ற பெண்ணே அந்த அதிர்ஷ்டசாலி ஆவார். அவருக்கு லொட்டரியில் $291,366 பரிசு விழுந்துள்ளது.
முன்னர் Shirleyக்கு $2 பரிசு மட்டுமே விழுந்தது, இதன்பின்னர் மீண்டும் லொட்டரி விளையாட முடிவு செய்த அவர் இவ்வளவு பெரிய பரிசை வென்றுள்ளார்.
OLG Prize Centreல் சென்று பரிசு விழுந்ததை உறுதி செய்த Shirley அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் வழி முழுவதும் உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டே சாலையில் நடந்து சென்றிருக்கிறார்.
அவரை பார்த்தவர்கள் சோகத்தில் அழுகிறார் என்றே நினைத்திருப்பர், ஆனால் கோடீஸ்வரியான மகிழ்ச்சியில் அவர் அழுதுள்ளார்.
பிலிப்பைன்ஸில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த Shirley கூறுகையில், எனது சொந்த நாட்டுக்கு செல்வதற்காக பரிசு பணத்தை செலவிடுவேன்.
பிலிப்பைன்ஸில் உள்ள என் குடும்பத்தாரை நான் பார்த்தே பல காலம் ஆகிவிட்டது.
மீண்டும் பயணம் செய்வது பாதுகாப்பானதாக மாறும் போது நான் பிலிப்பைன்ஸுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.