வெறும் 9 நாட்களில் 52 சதவிகித வருவாயை அள்ளிக்கொடுத்த முகேஷ் அம்பானியின் இந்த நிறுவனம்
பொதுவாக வர்த்தகர்கள் எவரும் கண்டுகொள்ளாத சாதாரண ஒரு நிறுவனம் வெறும் 9 நாட்களில் 52 சதவிகித வருவாயை அள்ளிக்கொடுத்துள்ளது.
லோட்டஸ் சாக்லேட்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான லோட்டஸ் சாக்லேட் என்ற நிறுவனமே சமீபத்தில் நிதியுலகில் புயலைக் கிளப்பியுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டில் அசாதாரணமான 250 சதவிகித வருவாயை அளித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 75 சதவிகித வளர்ச்சி பதிவாகியுள்ளது.
1989ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனமானது 1992 முதல் செயல்பட தொடங்கியது. ஆனால் 2023ல் முகேஷ் அம்பானி இந்த நிறுவனத்தை வாங்கினார். அப்போது முதல் லோட்டஸ் நிறுவனம் Britannia, Nestle India போன்ற பெரு முதலைகளுடன் போட்டியிடத் தொடங்கியது.
வருவாய் 337.4 சதவிகிதம்
மட்டுமின்றி, 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் நிகர லாபத்தில் 4700.87 சதவிகித அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் வருவாய் என்பது 337.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அத்துடன் நிகர லாபம் என்பது ரூ 19.60 லட்சத்தில் இருந்து ரூ 9.41 கோடி என அதிகரித்துள்ளது. மட்டுமின்றி வருவாய் ரூ.32.31 கோடியில் இருந்து ரூ.141.3 கோடியாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |