உலகின் விலையுயர்ந்த Earphone.. விலை எவ்வளவு தெரியுமா?
லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் உலகின் விலையுயர்ந்த இயர்போனை (Earphone) பற்றி பார்க்கலாம்.
லூயிஸ் உய்ட்டன் நிறுவனம்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் உய்ட்டன் (LOUIS VUITTON) நிறுவனம், ஆடம்பர பொருட்கள் விற்பனைக்கு பெயர் பெற்றது. குறிப்பாக ஆடம்பரமான பேஷன் பிராண்ட்களுக்கு முக்கியமானது. இந்நிறுவனத்தில் பேக், பெல்ட்கள் மற்றும் ஆடைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாகவே, லூயிஸ் உய்ட்டன் பொருட்கள் என்றாலே காஸ்டலியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த நிறுவனத்தில் வாங்குவதற்கு உலகம் முழுவதும் பெரிய வாடிக்கையாளர் கூட்டமே உள்ளது.
தற்போது இந்நிறுவனமானது கேஜெட் (Gadget) விற்பனையிலும் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்நிறுவனம் கொண்டு வந்த இயர்போனை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
Horizon Light Up Earphones
கடந்த மார்ச் மாதம் லூயிஸ் உய்ட்டன் புதிய ஒயர்லெஸ் இயர்போனா ஹாரிசன் லைட் அப்பை (Horizon Light Up Earphones) விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த இயர்போனின் விலையை கேட்டு பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் விலை 1,660 டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.38 லட்சம்.
இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்கு இதில் என்ன இருக்கிறது என்பதை பார்த்தால் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த இயர்போனின் இயர்பட்கள் இலகுரக அலுமனியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Active noise-cancelling, அழைப்புகளுக்கான பின்னணி இரைச்சலை நீக்கும் Microphone மற்றும் Bluetooth Multi Band போன்றவை உள்ளது.
இதனை பயன்படுத்துபவர் ஒரே நேரத்தில் இரண்டு ஆடியோவை Stream செய்யலாம். இந்த கேஜெட் stainless steel carry case உடன் 28 மணி நேர பேட்டரி நீடிக்கும் வசதியை கொண்டுள்ளது. மேலும், இந்த கேஸ் பவர் பேங்காகவும் செயல்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |