பிரித்தானியாவை வழிநடத்த தயாரான தோற்றமா என விமர்சனம்: காரணமாக அமைந்த புகைப்படம்
பிரித்தானியாவின் மிக மூத்த அமைச்சராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் ஹேக்கின் காலணி கேள்வியை எழுப்பியுள்ளது.
லூயிஸ் ஹேக்
ஆண்டி பர்ன்ஹாம் விடுமுறைக்காக வெளிநாடு சென்றதைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் மிக மூத்த அரசு அமைச்சராக லூயிஸ் ஹேக் (Louise Haigh) பொறுப்பேற்றுள்ளார்.
39 வயதான லூயிஸ் ஹேக் First Secretary of State என்ற பதவியின் மூலம் செயல்பட உள்ள நிலையில், ஒயிட்ஹாலில் தனது கடமைகளை செய்துகொண்டிருந்தபோது புகைப்படம் எடுக்கப்பட்டார்.
அப்போது தேய்ந்துபோன விளையாட்டு காலணிகளுடன் நடந்து சென்றது லூயிஸ் கவனிக்கப்பட்டது. இது தற்போது பிரித்தானியாவை வழிநடத்த தயாரான தோற்றமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
முதல் அரசு செயலாளர்
1960-களின் பிற்பகுதியில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பார்பரா கேஸில் வகித்த 'முதல் அரசு செயலாளர்'; அதாவது மற்ற அனைத்து அரசு செயலாளர்களையும் விட உயர்ந்த அந்தஸ்தைக் குறிக்கும் பதவி - என்ற பொறுப்பை வகிக்கும் முதல் பெண்மணி இவராவார்.
'ரெட் லூ' என்று அழைக்கப்படும் லூயிஸ் ஹேக், இந்த வாரம் வழக்கம் போல் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பிரதமர் பர்ன்ஹாம் இல்லாத நிலையில் அவர் அன்றாட முடிவுகளை எடுக்க மாட்டார் என எண் 10 (டவுனிங் ஸ்ட்ரீட்) வலியுறுத்தியுள்ளது.
இந்த சூழலில்தான் அவர் செவ்வாயன்று சாம்பல் நிற பேன்ட் சூட், வெளிர் நிற கை இல்லாத மேலாடை மற்றும் தேய்ந்துபோன ஒரு ஜோடி வெள்ளை அடிடாஸ் காலணிகளுடன் அமைச்சரவை அலுவலகத்திற்குள் நுழைவது காணப்பட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |