கிறிஸ்துமஸை முன்னிட்டு ஊழியர்களுக்கு 240 மில்லியன் டொலர் போனஸாக அளித்த நிறுவனம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் செயல்படும் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் 240 மில்லியன் டொலர் போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
போனஸ் தொகை
லூசியானா மாகாணத்தில் செயல்படும் Fibrebond என்ற தொழிற்சாலையில் உள்ள 540 முழு நேர தொழிலாளர்களே சராசரியாக 443,000 டொலர் போனஸ் தொகையை அடுத்த 5 வருடங்களுக்கு பெற உள்ளனர்.

Fibrebond நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Graham Walker தமது நிறுவனத்தை வாங்க முன்வருபவர்கள், அதன் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகையில் 15 சதவீதத்தை நிறுவனத்தின் ஊழியர்களுக்காக ஒதுக்குவதாக இருந்தால் மட்டுமே விற்பனை செய்வேன் என்று கூறியிருந்தார்.
தற்போது Eaton என்ற நிறுவனம் அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டதுடன், 1.7 பில்லியன் டொலருக்கு Fibrebond நிறுவனத்தை வாங்கவும் முடிவு செய்தது.
ஜூன் மாதம் நடந்த இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போது டிசம்பர் மாதம் ஊழியர்கள் போனஸ் தொகையைக் கைப்பற்றியுள்ளனர். சவாலான காலங்களில் நிறுவனத்தின் பக்கம் நின்ற ஊழியர்களுக்குப் வெகுமதி அளிக்க வாக்கர் விரும்பினார். அது தற்போது நிறைவேறியுள்ளது.
1982ல் கிளாட் வாக்கர் என்பவரால் சுமார் 1 டசின் ஊழியர்களுடன் Fibrebond நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. 1990களில் சிறப்பாக செயல்பட்ட இந்த நிறுவனம், 1998ல் தீ விபத்தில் சிக்கி சாம்பலானது.
2000 ஆண்டுக்கு பின்னர் வாடிக்கையாளர்களும் கைவிட, 900 ஊழியர்களில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டு கடைசியில் 320 என கொண்டுவரப்பட்டது.
மட்டுமின்றி, உற்பத்தி நிறுத்தப்பட்டும், தமது ஊழியர்களுக்கு கிரஹாம் வாக்கர் ஊதியமளித்து வந்துள்ளார். இறுதியில், நிறுவனத்தை விற்று, கடன்களை அடைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆதாயத்தில் பங்கு
இந்த நிலையில், 2015ல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்புக்கு வந்த கிரஹாம் வாக்கர், மிக மோசமான கட்டத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சில ஊழியர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.
அத்துடன், தம்மை நம்பி உடனிருந்தால், கண்டிப்பாக ஆதாயத்தில் பங்கு தருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் விற்பனை 400 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையிலேயே தற்போது Eaton நிறுவனம் கிரஹாம் வாக்கரின் நிபந்தனைகளிக்கு ஒப்புக்கொண்டதுடன், 1.7 பில்லியன் டொலருக்கு Fibrebond நிறுவனத்தை வாங்கவும் முடிவு செய்தது.
தற்போது தான் தனது ஊழியர்களிடம் ஒரே ஒரு உதவியை மட்டுமே கேட்பதாக கிரஹாம் கூறியுள்ளார் - அந்தப் பணம் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதைத் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |