பெற்றோர் ஒரே பாலினத்தவர்கள் என்பதால்...ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
- பெற்றோர் ஒரே பாலினத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் ஐந்து வயது சிறுமி பள்ளியில் இருந்து வெளியேற்றம்.
- வேதத்தின் போதனைகளின்படி கற்பிப்பதற்கும் வாழ்வதற்கும் உறுதியளித்துள்ளது என பள்ளி விளக்கம்
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள பள்ளியில் பெற்றோர் ஒரே பாலினத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் ஐந்து வயது சிறுமியை பள்ளியை விட்டு வெளியேற்றியதாக தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் டீகுயின்சியில் உள்ள பைபிள் பாப்டிஸ்ட் அகாடமியின் பள்ளி நிர்வாகம், எமிலி மற்றும் ஜென்னி பார்க்கர் என்ற இருவர் ஒரே பாலினத்தை சேர்ந்த தம்பதிகள் என்பதால் அவர்களுடைய ஐந்து வயதி மகள் ஜோயியை பள்ளியை விட்டு வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது.
ஜோயி இதற்கு முன்பாக அதே பைபிள் பாப்டிஸ்ட் அகாடமியில் முன்பள்ளியில் பயின்றுள்ளார், ஆனால் ஜோயி தனது மழலையர் பள்ளி ஆண்டைத் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள்( எமிலி மற்றும் ஜென்னி) ஒரு கூட்டத்திற்கு முதல்வர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டோம்.
அப்போது எங்கள் வாழ்க்கை முறை தேர்வுகள் காரணமாக ஜோயி இனி அங்கு பள்ளிக்கு செல்ல முடியாது என்று எங்களுக்குத் தெரிவித்தனர், என எமிலி மற்றும் ஜென்னி பார்க்கர் உள்ளூர் செய்தி இணைப்பான KPLC தெரிவித்தனர்.
EPA
ஆனால் ஜோயி பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட பிறகு சமூகத்தில் பரவலான ஆறுதல் கிடைத்தது மற்றும் ஜோயி தனது மழலையர் பள்ளி ஆண்டைத் தொடங்குவதற்கு மற்ற உள்ளூர் கிறிஸ்தவ பள்ளிகளில் இருந்து சலுகைகள் வருகின்றது என எமிலி மற்றும் ஜென்னி பார்க்கர் ஜோடி தெரிவித்துள்ளது.
இது குறித்து பைபிள் பாப்டிஸ்ட் அகாடமி தெரிவித்த கருத்தில், பள்ளி வேதத்தின் போதனைகளின்படி கற்பிப்பதற்கும் வாழ்வதற்கும் உறுதியளித்துள்ளது என விளக்கம் அளித்துள்ளது.