பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம்
லூவ்ரே அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேனை வைத்து ஜேர்மன் நிறுவனமொன்று விளம்பரம் செய்துள்ளது.
பிரான்சின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த அதிரடியான நகை திருட்டு சம்பவம் உலகம் உழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்படகில் வெறும் 7 நிமிடங்களில் நடந்த இந்த திருட்டில், நெப்போலியன் தனது மனைவி மெரி லூயிக்கு வழங்கிய மரகத மற்றும் வைர நெக்லஸ் உள்ளிட்ட 8 நகைகள் அப்பல்லோ கேலரியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த திருட்டில் பயன்படுத்தப்பட்ட 'Agilo' எனும் லிப்ட் கருவி ஜேர்மனியில் உள்ள Boecker நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இந்த கருவி கிசுகிசுப்பதைப் போல அமைதியாக இயங்கும் என Boecker நிறுவனம் விளம்பரத்தில் கூறியுள்ளது. இந்த கருவி 400 கிலோ வரை எடையை தூக்கக்கூடியது.
பாரிஸில் பழைய கட்டிடங்களில் லிப்ட் இல்லாத காரணத்தால் இத்தகைய கருவிகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.
Boecker நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Alexander Boecker, இந்த கருவி சில ஆண்டுகளுக்கு முன் பாரிஸில் உள்ள ஒரு வாடகை நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
திருடர்கள் கடந்த வாரம் டெமோ கேட்கும் பெயரில் கருவியை திருடி, அதன் லேபிள்கள் மற்றும் எண் பலகைகளை மாற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தை Boecker நிறுவனம் நகைச்சுவையாக அணுகி, "மீண்டும் விரைவாக செல்ல வேண்டிய நேரத்தில்" (When you need to get going again quickly) என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளது.
இது இணையத்தில் வைரலாகி, ஆண்டின் சிறந்த விளம்பரம் என பலர் பாராட்டியுள்ளனர்.
நடந்தது திருட்டு சம்பவமாக இருந்தாலும், Boecker நிறுவனம் தங்கள் தயாரிப்பின் திறமையை உலகம் அறிந்துகொள்வதற்காக வாய்ப்பாக இதனை எடுத்துக்கொண்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Louvre Museum heist, Boecker crane ad, Agilo lift robbery, Napoleon necklace stolen, Paris jewellery theft, German firm viral ad, Louvre robbery 2025, Museum security breach, Boecker marketing stunt, Apollo Gallery theft