பிரான்ஸ் அருங்காட்சியகக் கொள்ளை... மீட்கப்பட வாய்ப்பில்லை: நிபுணர்கள் விளக்கம்
பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளையில் பறிபோன பொக்கிஷங்களை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏழு நிமிடங்கள்
ஞாயிற்றுக்கிழமை நடந்த நவீன வரலாற்றிலேயே மிக மோசமான கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதால், திங்கள்கிழமையும் அருகாட்சியகம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெப்போலியன் காலத்தைச் சேர்ந்த பிரெஞ்சு கிரீட நகைகளிலிருந்து கலைப்பொருட்களைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்த வெட்கக்கேடான சம்பவத்தின் தாக்கங்களை பிரான்ஸ் மக்கள் ஜீரணிக்கத் தொடங்கியுள்ளனர்.
லூவ்ரில் உள்ள அப்பல்லோ கேலரிக்குள் நுழைய, கொள்ளையர்கள் லொறியில் பொருத்தப்பட்ட ஏணியைப் பயன்படுத்தியுள்ளனர். மொத்த நடவடிக்கையும் ஏழு நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
லூவ்ரிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில், ராணி மேரி-அமெலி மற்றும் ராணி ஹார்டென்ஸ் அணிந்திருந்த தலைப்பாகை மற்றும் நெக்லஸ் உள்ளிட்ட வைரம் மற்றும் சபையர் நகைத் தொகுப்பும் அடங்கும்.
அரச குடும்பத்தால் அணியப்படும் ஒரு ரத்தினக் கல்லால் ஆன இந்த கிரீடத்தில் 24 இலங்கை நீலக்கல்லும் 1,083 வைரங்களும் உள்ளன, அவற்றைப் பிரித்து ப்ரூச்ச்களாக அணியலாம் என்று லூவ்ரே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மார்ச் 1810 இல் நெப்போலியனின் இரண்டாவது மனைவி ஆஸ்திரியாவின் மேரி-லூயிஸுக்கு திருமண பரிசாக வழங்கப்பட்ட ஒரு மரகத நெக்லஸ் மற்றும் காதணிகளும் திருடப்பட்டன. இதில் 32 நுணுக்கமாக வெட்டப்பட்ட மரகதக் கற்களும் 1,138 வைரங்களும் உள்ளன.
விற்கப்பட்டிருக்கலாம்
கொள்ளைபோன ஒன்பது பொருட்களில் எட்டு கணக்கில் வராமல் உள்ளன. இந்த நிலையில், லூவ்ரேயில் நடந்த கொள்ளை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை அம்பலப்படுத்தியதாக பிரெஞ்சு நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் ஒப்புக்கொண்டார்.
பிரெஞ்சு மக்கள் அனைவரும் தாங்கள் கொள்ளையடிக்கப்பட்டதைப் போல உணர்கிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பிரெஞ்சு செனட்டின் மையவாத உறுப்பினர் நடாலி கூலெட் தெரிவிக்கையில்,
கொள்ளையிடப்பட்டுள்ள நகைகள் ஏற்கனவே நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நகைகள் துண்டு துண்டாக வெட்டி விற்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிபுணர் ஒருவர் அலித்துள்ள விளக்கத்தில், திருடர்கள் முடிந்தவரை விரைவாக அந்த நகைகளைப் பணமாக்க விரும்பினால், அவர்கள் அதை உருக்கலாம் அல்லது விலைமதிப்பற்ற அந்த கற்களை மீண்டும் வெட்டலாம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |