முன்னாள் காதலனை கூலிப்படையை வைத்து அடித்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த கல்லூரி மாணவி!
கேரளாவில் தனது முன்னாள் காதலனை தற்போதைய காதலனுடன் சேர்ந்து அடித்து நிர்வாணமாக்கி சித்திரவதை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் காதலனின் தொல்லை
கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்த லட்சுமி பிரியா(21) கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் லட்சுமி தனது கல்லூரி இன்னொரு மாணவனோடு காதலில் விழுந்திருக்கிறார். இதனால் முதல் காதலனோடு லட்சுமியால் சரியாக பேச முடியவில்லை.
@instagram
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அடிக்கடி லட்சுமியை தொல்லை செய்துள்ளார். இதனை தொடர்ந்து லட்சுமி கடந்த மார்ச் 5ஆம் திகதி தன் முதல் காதலனை குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
அங்கு சென்ற அவரை லட்சுமியின் இரண்டாவது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் காரில் வைத்து அடித்திருக்கிறார்கள். மேலும் அந்த நபரை நிர்வாணமாக்கி உடலில் சூடு வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் லட்சுமி பிரியாவின் முன்பு அரங்கேறியிருக்கிறது.
கைது செய்யப்பட்ட லட்சுமி
தனது மகனை காணவில்லை என முதல் காதலனின் பெற்றோர் புகார் கொடுக்க அதன் பேரில் காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது உடலில் பல சிக்ரெட்டால் சூடு வைக்கப்பட்ட காயங்களோடு அந்த நபர் சாலையோரத்தில் விழுந்திருக்கிறார்.
மேலும் லட்சுமி பிரியாவின் போன் சிக்னலை வைத்து காவல்துறை அவரை கைது செய்துள்ளது. அவரது கல்லூரி நண்பர்கள் அனைவரும் தலைமறைவு ஆகியுள்ளனர்.
@manoramma
இதுகுறித்து பொலிஸாரிடம் பேசிய லட்சுமி பிரியாவின் தாய் அந்த நபர் லட்சுமியை காதலிக்கவில்லை என்றும் அவர் அவளது நண்பர் தான் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த நபர் தனது மகளை காதலிக்க சொல்லி வற்புறுத்திய தோடில்லாமல் மோசமான வீடியோக்களையும் தனது மகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் தனது மகளுக்கு எந்தப் பங்கும் இல்லை.இது எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. கும்பல் தாக்கும் போது அவரை அடிக்க வேண்டாம் என எனது மகள் கூறி உள்ளார்.அந்த கும்பலில் உள்ளவர்களின் விவரம் தெரியவில்லை என அவரது தாயார் கூறியுள்ளார்.