காதல் ஜோதிடத்தில் யார் யாருக்கு என்ன பலன்: பிரிந்து செல்பவர்களுக்கு இதுதான் பரிகாரம்
காதல் என்பது ஒரு பழக்கமான வார்த்தை தான் நமக்கு. காதலை ஏற்றுக் கொண்டாடினாலும் அதனால் வரும் பிரிவை மாத்திரம் யாரும் ஏற்க மறுக்கிறார்கள்.
ஆனால் காதலர்களின் ஜோதிடத்தில் யார் யாருக்கு எல்லாம் காதல் வரும், இந்தக் காதல் கிரகணம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
காதலும் கிரகமும்
அதன்படி செவ்வாய் அதிக வீரியத்திற்கு உரியவர். இவர் ஆண்,பெண் உறவில் அதிக வீரியம் கொண்டவர்கள்.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையில் இருக்கும் ஜாதககாரர்களுக்கு காதல் வேட்கை அதிகமாக இருக்கும். இந்த சேர்க்கையால் இவர்கள் காதல் விடயத்தில் எந்த எல்லைக்கும் போவார்கள். சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்தால் காதல் விடயத்தில் வெறியாகவே இருப்பார்கள், அதே போல செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்தால் காதல் வேட்கை அதிகமாக இருக்கும்.
புதன் கிரகம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். இவர் ஆணும், பெண்ணும் இல்லாத ஒரு தன்மையைக் கொண்டவர். சந்திர கிரகமானது தான் காதலிக்க தூண்டும் தன்மை உள்ளது.
சந்திரனுக்கும் காதலுக்கும் அதிக தொடர்பு உள்ளது. இந்தச் சந்திரன் தான் சஞ்சல புத்தியையும், சபல எண்ணங்களையும், கற்பனை உலகத்தை உருவாக்கவும் காரணமானவர்.
சனி கிரகமானது காதலில் சிக்கலை உண்டுபண்ணுபவர். இவரால் காதலர்கள் நிறைய அவமானங்களையும் காதல் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டும்.
ராகு மற்றும் கேது கிரகம் திருமணத் தடையையும் காதல் தடையையும் ஏற்படுத்துவது. மேலும் ஒரு தலைக் காதல், சட்டரீதியாக திருமணம் செய்தல், பதிவு திருமணம் செய்தல் போன்ற விடயங்களுக்கு கேது கராரானவர்.
பரிகாரம்
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பாதமாக அமைந்தால் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரப் பரிகாரத் தலங்களுக்கு சென்று தரிசிப்பது நல்லது.
கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற தம்பதிகளோ, காதலிகளோ வெள்ளிக்கிழமை சுக்கிரனை வழிபடுதல் நன்மையைத் தரும்.
மேலும், சிவ ஆலயங்களுக்கு சென்று நவகிரக சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வந்தால் சுக்கிர தோஷம் நீங்கிவிடும்.