திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு

By Ragavan Jan 28, 2023 04:10 PM GMT
Report

காதல் மனைவியை திருமணம் செய்த நாளே பிரித்து அழைத்துச் சென்றதால், கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளிக்க முயற்சி

தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் ராகதேவன் எனும் இளைஞர், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு | Love Marraige Wife Missing Husbands Suicide

விசாரணையில்.,

அந்த விசாரணையில், சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நித்யா (21) என்பவரை காதலித்துள்ளார்.

நித்யா ஒரு வங்கி தேர்வு எழுத வந்தபோது அவருக்கும், ராகதேவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

கடந்த 6-ஆம் திகதி மின்னாம்பள்ளியில் இருக்கும் கோவிலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

இதனை அறிந்த நித்தியாவின் உறவினர்கள் அங்கு வந்து, இருவருக்கும் முறைப்படி மண்டபத்தில் வைத்து திருமணம் செய்து வைப்பதாகக் கூறி நித்யாவை சென்னைக்கு அழைத்து சென்றனர்.

மன உளைச்சல்

அதன் பிறகு, நித்யாவின் குடும்பத்தினரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சென்னைக்கு சென்று பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்.

ஆனால் நித்தியாவை கண்டுபிடிக்க முடியாததால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ராகதேவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். காதல் மனைவியை பிரித்துச் சென்றுவிட்டதால் காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US