கர்ப்பிணிப்பெண்ணைக் கொலை செய்த காதலர் நீதிமன்றம் வர மறுப்பு: நீதிபதி எடுத்த அதிரடி முடிவு
இங்கிலாந்தில், ஆறு மாத கர்ப்பிணியான தன் காதலியைக் கொலை செய்த நபர், தன்னால் நீதிமன்றத்துக்கு வந்து தன் காதலியின் குடும்பத்தினரை எதிர்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.
தந்தைக்கு மகளிடமிருந்து வந்த மொபைல் அழைப்பு
இங்கிலாந்திலுள்ள Stoke Newington என்னும் இடத்தில் வாழ்ந்துவந்த Ailish Walsh (28) என்ற பெண், கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, இரவு 10.20 மணியளவில் தனது தந்தைக்கு அறிமுகமான பெண் ஒருவரை மொபைலில் அழைத்துள்ளார். அந்த அழைப்பில், சண்டையிடும் மற்றும் அலறும் சத்தம் கேட்கவே, உடனடியாக மகளைக் காண ஓடோடிச் சென்றுள்ளார் அந்தப் பெண்ணின் தந்தை.
Image: Tom Bowles
மகள் வாழ்ந்த வீட்டுக்கு அவர் சென்றபோது, தன் மகள் இரத்தவெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் தன் மகளை அள்ளியணைத்து மடியில் கிடத்திக்கொண்டிருக்க, அதற்குள் தகவலறிந்துவந்த மருத்துவ உதவிக்குழுவினர் Ailishக்கு முதலுதவி சிகிச்சையளித்துள்ளார்கள்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி Ailish உயிரிழந்துவிட்டார். பெரும் துயரம் என்னவென்றால், Ailish ஆறு மாத கர்ப்பிணி. Ailishஇன் காதலர், கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கொடூரமாக அவரைக் கத்தியால் குத்தியிருந்தார்.
Image: Gofundme
தன் காதலரான Liam Taylor (37) போதைப்பொருள் எடுத்துவந்ததால், அவரைப் பிரிய முடிவு செய்திருந்தார் Ailish.
நீதிமன்றம் வர மறுத்த குற்றவாளி
வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், Ailishஇன் குடும்பத்தினர் தங்கள் பிள்ளையைக் கொன்றவனுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதைக் காண்பதற்காக அயர்லாந்திலிருந்து இங்கிலாந்திற்கு வந்திருந்தனர். Ailish அயர்லாந்து நாட்டவராவார்.
ஆனால், Ailishஇன் காதலரான Liam, நீதிமன்றத்துக்கு வர மறுத்துவிட்டார். தனக்கு கடந்த இரவு உடல் நலமில்லாமல் போனதாகவும், அத்துடன், தன்னால் Ailishஇன் குடும்பத்தினரை எதிர்கொள்ளமுடியாது, அது தனக்கு கஷ்டத்தைக் கொடுக்கும் என்றும் அவர் கூறிவிட்டார்.
தீர்ப்பளிக்க மறுத்த நீதிபதி
இந்நிலையில், தீர்ப்பு வழங்க இருந்த நீதிபதியான Nigel Lickley, குற்றவாளியான Liam வராமல் தீர்ப்பு வழங்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.
கொல்லப்பட்ட Ailishஇன் குடும்பத்தினர் தீர்ப்பைக் கேட்பதற்காக அயர்லாந்திலிருந்து வந்துள்ளது தனக்குத் தெரியும் என்று கூறிய நீதிபதி, Liam இல்லாமல் நான் தீர்ப்பு வழங்கமாட்டேன், நாங்கள் என தீர்ப்பு வழங்கப்போகிறோம் என்பதை அவர் கட்டாயம் கேட்டாகவேண்டும், இதை என் நோக்கத்தை Ailishஇன் குடும்பத்தினரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று கூறிவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |