உங்கள் ஸ்மார்ட்போனிலே ரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்- மலிவு விலையில் புதிய சாதனம்!
இனி நீங்களே உங்கள் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் வகையில், ஸ்மார்ட் போனுடன் இணைக்கக்கூடிய எளிய, குறைந்த விலை சாதனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் கிளிப்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் கிளிப் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
கிளிப் போன்ற இந்த சாதனத்தை உங்கள் ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தி பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கிளிப்பை பொருத்தியப்பின் அதில் உங்கள் விரலை வைத்து அழுத்தும்போது, ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும்போது ரத்த அழுத்த அளவீட்டை கண்காணிக்கலாம்.
Photos courtesy of the Digital Health Lab / UC San Diego
மலிவு விலை சாதனம்
இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், ரத்த அழுத்தத்தை அனைவரும் எளிதாக கண்காணிக்க ஏற்ற வகையில் குறைக்க மலிவான தீர்வாக இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பிலிருந்து வேறுபடுவதாகவும், இதில் ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கின்றனர்.
Photos courtesy of the Digital Health Lab / UC San Diego
எவ்வளவு செலவாகும்?
இந்த கிளிப்பை தயாரிப்பதற்கு சுமார் 80 சென்ட் (இந்திய பணமதிப்பில் ரூ.66) செலவாகும். அதிக அளவில் உற்பத்தி செய்யும் போது, விலை ஒன்றுக்கு 10 சென்ட் வரை (ரூ.8.30) குறைவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த தொழில்நுட்பம் மே 29 அன்று அறிவியல் அறிக்கைகளில் வெளியிடப்பட்டது.
Photos courtesy of the Digital Health Lab / UC San Diego
Photos courtesy of the Digital Health Lab / UC San Diego
Blood Pressure Monitor, Low-cost Smartphone Attachment, 3D Printed Clip, New Smartphone Device