வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை?
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான காரணத்தால் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
எந்த மாவட்டங்களில் கனமழை?
தமிழகத்தில் கடந்த ஒக்டோபர் 15-ம் திகதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த -9ம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்ட்டது. ஆனால், அது தாமதமாகி நேற்று உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம் - இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்பதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி இன்று (ஒக்டோபர் 12) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல நாளை (ஒக்டோபர் 13) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |