வங்கக்கடலில் உருவாகும் அர்னாப் புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 26ஆம் தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி புயலாக உருவானால் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள ARNAB என்ற பெயர் சூட்டப்படும்.
மேலும் நடப்பாண்டில் வங்கக்கடலின் முதல் புயலாகவும் இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |