வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.., தீவிர புயலாக மாறும்- வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் நிகோபார் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மாயம் கூறுகையில்..,
வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று வருகிறது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதால், இதன் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் நகர்வின் தொடர்ச்சியாக, அடுத்த 6 மணி நேரத்திற்குள் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும்.

அதனைத் தொடர்ந்து, நாளை தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். புயலாக உருவானால், இந்தியா பரிந்துரைத்துள்ள "முரசு" (Murasu) என்ற பெயர் சூட்டப்படும்.
இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லூர் முதல் நரசாபுரம் வரையிலான கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |