வங்கக்கடலில் இன்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை?
வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த இரண்டு நாட்களில் வடக்கு- வடமேற்கு திசைகளில் நகரக்கூடும்.
இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் செப் 11ஆம் திகதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55km வேகத்திலும், இடையிடையே 65km வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
இதனால் இப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |