வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., புயலாக மாற வாய்ப்பு?
வங்கக்கடலில் வருகிற 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வானிலை மையம் கூறுகையில்..,
அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், வருகிற 13ஆம் தேதி வாக்கில் வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இந்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் இதுவரை 3 காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாகின. அதில் 2 புயலாக வலுப்பெற்று ஆந்திர பகுதிகளில் கரையை கடந்தது.
தற்போது உருவாக உள்ள 4ஆவது காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவெடுக்குமா? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |