வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.., எந்தெந்த பகுதிகளில் மழை?
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா மாநிலங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரிதளவில் மழை இருக்காது என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |