வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், மே 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |