இலங்கை அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை: கிழக்கு மாகாண மக்களுக்கு வானிலை எச்சரிக்கை
இலங்கையை நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து வருவதால் நாட்டின் கிழக்கு மாகாண பகுதிகளில் மின்தடை ஏற்படாலம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு நிலை
இலங்கை ஒட்டிய வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பகுதிகளில் இன்று முதல்(08.01.26) எதிர்வரும் (10.01.26) வரை பலத்த காற்றும் கனமழையும் பெய்ய கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட கூட பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மின்தடை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த இடர்களை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தயார் நிலையில் இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட அதிபர் வெளியிட்ட அறிவிப்பு
வளிமண்டல திணைக்கள எதிர்வு கூறலின் அமைவாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இன்று தொடக்கம் 10.01.2026 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 100 மி.மீ க்கும் அதிக ஆன மழை பொழிவு இருக்கக்கூடும், மேலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 கி.மீ வரை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இடையிடையே மின் தடை படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகிறது.
மேலும் இதனை கருத்தில் கொண்டு தயார்ப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்வதாகவும், அடுத்தடுத்து வரும் வானிலை அறிக்கைகளை தொடர்ந்து கவனிக்குமாறும் தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று மாவட்ட அரசாங்க அதிபர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |