நதியில் வெள்ளம் குறைந்ததால் ஜேர்மனியில் உருவாகியுள்ள பிரச்சினை
ஜேர்மனியில் சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய நதியொன்றில் வெள்ளத்தின் அளவு குறைந்துள்ளதால் வர்த்தகர்களுக்கு செலவு அதிகரித்துள்ளது.
நதியில் குறைந்த வெள்ளம்
ஜேர்மனியில் மழை குறைந்துள்ளதால், Rhine நதியில் வெள்ளத்தின் அளவு குறைந்துள்ளது.
அதனால், கப்பல் மூலம் சரக்குகளை அனுப்பும் வர்த்தகர்களுக்கு செலவு அதிகரித்துள்ளது.
அதாவது, நதியில் வெள்ளம் குறைவாக உள்ளதால், கப்பல்களில் முழு கொள்ளளவுக்கு சரக்குகளை ஏற்ற முடியவில்லை. கப்பல்களின் வகையைப் பொறுத்து 50 முதல் 70 சதவிகிதம் வரை மட்டுமே பொருட்களை நிரப்ப முடிகிறது.

ஆக, மீதமுள்ள சரக்குகளை அனுப்ப, வேறு கப்பல்களின் உதவியை நாடவேண்டிய நிலை வர்த்தகர்களுக்கு உருவாகியுள்ளது. அதனால், அவர்களுக்கு செலவு அதிகரித்துள்ளது.
ஜேர்மனியில், உணவு தானியங்கள், தாதுக்கள், நிலக்கரி மற்றும் எண்ணெய் போக்குவரத்தில் Rhine நதி முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |