பிரித்தானிய பூங்காவில் நடந்த உயிரிழப்பு: 28 வயது பெண் கொலைக் குற்றச்சாட்டில் கைது
பிரித்தானியாவில் பூங்காவில் நடந்த உயிரிழப்பு சம்பவத்தில் 28 வயது பெண் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட நபர்
சஃபோல்க்-கின்(Suffolk) லோஸ்டாஃப்ட்(Lowestoft) பகுதியில் ஸ்பாரோஸ் நெஸ்ட் கார்டன்ஸ் பூங்காவில் 54 வயது கேரி கிராண்ட் என்ற நபர் உயிருக்கு ஆபத்தான நிலையுடன் இருப்பதாக காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அவசர சிகிச்சை குழுவினர் கேரி கிராண்ட்-க்கு உரிய முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் அவர் அங்கேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

28 வயது பெண் ஒருவர் மீது கொலை குற்றச்சாட்டு
இந்நிலையில் ஆம்பர் ஸ்டெபிங்ஸ் என்ற 28 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆம்பர் ஸ்டெபிங்ஸ் திங்கட்கிழமை கிரேட் யர்மவுத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |