சிலிண்டர் தட்டுப்பாடு.., விரைவில் தீராமல் இருக்க உதவும் ஒரு சில டிப்ஸ்
அமெரிக்க-ஈரான் போரின் தாக்கம் இந்தியா முழுவதும் இருக்கும் பெரும் பிரச்சினை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் பற்றாக்குறையால் இந்தியாவின் பெருநகரங்களில் உணவகங்கள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வணிக சிலிண்டர் மட்டுமின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் இன்னும் சில நாட்களில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தற்போது உபயோகத்தில் இருக்கும் சிலிண்டர் காலியாகி விட்டால் அடுத்த சிலிண்டர் வருவதற்கு வழக்கத்தை விட அதிக நாட்களாகும்.
எனவே தற்போதிருக்கும் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.
அந்தவகையில், சிலிண்டர் நீண்ட நாட்கள் தீராமல் இருக்க அதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.
எப்படி பயன்படுத்துவது?
பிரஷர் குக்கிங் பயன்படுத்துதல்- பிரஷர் குக்கரில் சமைப்பது நேரத்தையும் எரிபொருளையும் குறைக்கிறது.
குறைந்த தீயில் சமைத்தல்- அதிக தீயில் சமைக்கும் போது வெப்பம் வீணாகும். உணவு கொதிக்கத் தொடங்கிய பிறகு தீயை குறைத்தால் சுமார் 25% வரை எரிபொருளைச் சேமிக்க முடியும்.
ஊறவைத்து சமைத்தல்- பருப்பு, அரிசி மற்றும் தானியங்களை முன்பே ஊறவைத்து சமைத்தால் அவை வேகமாக சமைக்கப்படும். இதனால் எரிவாயு பயன்பாடு குறையும்.
அகலமான பாத்திரம் பயன்படுத்துதல்- அகலமான பாத்திரங்களில் சமைத்தால் பர்னரில் இருந்து வரும் வெப்பம் சரியாகப் பரவி விரைவாக சமைக்க உதவுகிறது. இதனால் எரிபொருள் வீணாகாமல் இருக்கும்.

சரியான அளவு நீர் பயன்படுத்துதல்- அதிக தண்ணீர் சேர்த்தால் அது ஆவியாக அதிக நேரம் எடுக்கும். அதனால் தேவையான அளவு நீரையே பயன்படுத்துவது நல்லது.
சிறிய பர்னர் பயன்படுத்துதல்- பெரிய பர்னர்களை விட சிறிய பர்னர்கள் 6 முதல் 10% வரை குறைவான எரிபொருளை பயன்படுத்துகின்றன.
பாத்திரங்களை மூடி சமைத்தல்- பாத்திரத்தை மூடி சமைத்தால் வெப்பம் உள்ளேயே தங்கி உணவு விரைவாக சமைக்க உதவும். இதனால் எரிவாயு செலவும் குறையும்.
பர்னர்களை சுத்தமாக வைத்தல்- பர்னரில் அழுக்கு இருந்தால் தீ சரியாக வராது. இதனால் அதிக எரிபொருள் செலவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |