தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்த இலங்கை வீரர்! ஐபிஎல் ஏலத்தில் பெருந்தொகைக்கு அவரை எடுக்க போகும் அணி
லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் இலங்கை வீரர் அவிஸ்கா பெர்ணான்டோ தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட நிலையில் ஐபிஎல் அணிகள் அவரை தட்டி தூக்க காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் லங்கா பிரிமியர் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு லீக் போட்டியில் கேண்டி வாரியர்ஸ், ஜப்னா கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் ஜப்னா அணிக்காக விளையாடிய அவிஸ்கா பெர்ணான்டோ பேட்டிங்கில் எதிரணியை திணறடித்தார்.
அதன்படி டிஎம் சம்பத் வீசிய ஓவரில் பெர்ணான்டோ தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அவர் இப்போட்டியில் 23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
பெர்ணான்டோ தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தின்போது அவர் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை ஏலம் எடுக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், சில அணிகளும் இவரை அதிக தொகைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.