பறந்த சிக்சர்களால் அபார வெற்றி! மீண்டும் பார்முக்கு திரும்பிய இலங்கை நட்சத்திர வீரரால் ரசிகர்கள் உற்சாகம்
லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியது கொழும்பு ஸ்டார்ஸ் அணி.
அணியின் தலைவராக இருந்தும், காயம் காரணமாக முதல் 4 ஆட்டங்களில் விளையாடாத அஞ்சலோ மேத்யூஸ், முதல் போட்டியில் 57 பந்துகளில் 73 ரன்களை எடுத்தார். மூன்று சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளை உள்ளடக்கிய மேத்யூஸின் இன்னிங்ஸ், இந்த தொடரில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஓட்டமாக இருந்தது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது போட்டி மேத்யூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே ஆரம்பமானது.
மழை காரணமாக 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது. அணியின் ஆரம்ப வீரரான குசல் பெரேரா நேற்றைய ஆட்டத்தில் இடம்பெறாத காரணத்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்காத மேத்யூஸ் கொழும்பு ஸ்டார்ஸுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார்.
Their bowling was on point and so was their winning attitude! @SLColomboStars turn things around, beating the formidable @GalleGladiators by 41 runs. @OfficialSLC #LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #Cricket #WinTogether #LankaPremierLeague #TheFutureisHere pic.twitter.com/HZRWiQGZWB
— LPL - Lanka Premier League (@LPLT20) December 12, 2021
மேத்யூஸுடன் இணைந்து இன்னிங்ஸை ஆரம்பித்த பத்தும் நிஸ்ஸங்க இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழக்க, கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் அஷான் பிரியஞ்சன் தலைமை தாங்கினார்.
பவர் ப்ளேயில் 5 ஓவர்களில் 25 ரன்கள் மாத்திரமே எடுத்திருந்தாலும், காலி கிளியேட்டர்ஸின் செதப்பலான விக்கெட் கீப்பிங் காரணமாக இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு அதிக ரன்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த இன்னிங்ஸில் மேத்யூஸ் 73 ரன்களை பெற்று ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த சண்டிமால் தனது பங்கிற்கு 14 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கலாக 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக கொழும்பு ஸ்டார்ஸ் 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது. பின்னர் 104 பந்துகளில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய காலி கிளாடியேட்டர்ஸ் அணி 16.5 ஓவர்களில் 121 ரன்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
Chandimal (@chandi_17) can do no wrong; he donates his cash prize to @LittleHeartsLK Foundation. ? @SLColomboStars @OfficialSLC #LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #Cricket #WinTogether #SriLanka #Season2 #T20cricket #LankaPremierLeague #TheFutureisHere pic.twitter.com/nGYSzwMW02
— LPL - Lanka Premier League (@LPLT20) December 12, 2021
இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் ஆட்ட நாயகன் விருது வேகமான துடுப்பாட்டம், ஸ்டம்பிக், விக்கெட் கீப்பிங் மற்றும் பிடியெடுப்பு என்பவற்றில் அசத்திய தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் சொதப்பி வரும் தினேஷ் சண்டிமால் மீண்டும் அசத்தலான பார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
Here's the match summary! ?@SLColomboStars @GalleGladiators @OfficialSLC #LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #Cricket #WinTogether #SriLanka #Season2 #T20cricket #LankaPremierLeague #TheFutureisHere pic.twitter.com/zmYYf1WL8M
— LPL - Lanka Premier League (@LPLT20) December 12, 2021