லங்கா பிரீமியர் லீக்! அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறிய ஜப்னா கிங்ஸ்.. அசத்தல் வெற்றி
லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஜப்னா கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜப்னா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தம்புள்ளை அணி 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 69 ரன்களுக்கு சுருண்டது.
Spin is in the blood! Chathuranga De Silva overshadowed his brother, Wanindu with a thrilling spell of 4 for 16. @ipg_productions @OfficialSLC @SatsportNews #LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #Cricket #WinTogether #SriLanka #Season2 #T20cricket pic.twitter.com/qVxcq9GGJp
— LPL - Lanka Premier League (@LPLT20) December 13, 2021
ஜப்னா அணி சார்பில் சதுரங்க டிசில்வா 4 ஓவர்களில் 16 ரன்களை வழங்கி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் தவிர மகேஷ் தீக்ஷன 3 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்கா மற்றும் அசேன் பண்டார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஜப்னா அணி 9.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சதுரங்க டிசில்வா ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.
All hail the @KingsJaffna as they cruise to a crushing victory over the @DambullaGiants by 7 wickets. @OfficialSLC #LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #Cricket #WinTogether #SriLanka #Season2 #T20cricket #LankaPremierLeague #TheFutureisHere pic.twitter.com/EAw1r6pOEq
— LPL - Lanka Premier League (@LPLT20) December 13, 2021