சொற்ப ரன்களில் சுருண்ட கண்டி அணி! மிரட்டிய கொழும்பு வீரர்கள்... பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய போட்டியில் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி நான்காவது அணியாக பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
தொடரின் 20வது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் கண்டி வோரியஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் கொழும்பு அணி பேட்டிங் ஆடியது.
கொழும்பு ஸ்டார்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது. அந்த அணி சார்பில் சண்டிமால் அவுட்டாகாமல் 44 ரன்களையும், குசல் பெரேரா 58 ரன்களை எடுத்தார்.
Mathews and the Stars shine tonight. Another emphatic win! @Angelo69Mathews @SLColomboStars @OfficialSLC #LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #Cricket #WinTogether #SriLanka #Season2 #T20cricket #LankaPremierLeague #TheFutureisHere pic.twitter.com/Z30Lsvnrdc
— LPL - Lanka Premier League (@LPLT20) December 17, 2021
இதனைத்தொடர்ந்து 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கண்டி வோரியஸ் அணி, 17 ஓவர்கள் நிறைவில் 124 ரன்களுக்கு சுருண்டது. இதனால் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ரவி பொபாரா 47 ரன்களையும், கென்னர் லீவிஸ் 21 ரன்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெப்ரி வெண்டர்சே தேர்வு செய்யப்பட்டார்.
It's Vandersay all the way! @Vandersay @SLColomboStars @OfficialSLC #LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #Cricket #WinTogether #SriLanka #Season2 #T20cricket #LankaPremierLeague #TheFutureisHere pic.twitter.com/nkriDVJkMp
— LPL - Lanka Premier League (@LPLT20) December 17, 2021