லங்கா ப்ரீமியர் லீக்! அதிரடி காட்டிய வீரர்கள்... கண்டி அணியை வீழ்த்திய கலே அணி
லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கண்டி வாரியர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.
இலங்கையில் நடத்தப்படும் லங்கா பிரீமியர் லீக் தொடர் பிரபலமானதாகும். ஐபிஎல் தொடர் போன்றே இந்த லீக்கிலும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கடந்த 5 ஆம் திகதி தொடங்கியது. கொழும்பு ஸ்டார்ஸ் , டம்புல்லா ஜியாண்ட்ஸ் , கலே கிளாடியேட்டர்ஸ், ஜஃப்னா கிங்ஸ் , கண்டி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன.
An intense nail-biter to finish off tonight. Congratulations to @GalleGladiators
— LPL - Lanka Premier League (@LPLT20) December 7, 2021
අවසන් පන්දුවාරය දක්වා කරටකර තරඟයකින් පසු ගාල්ල කණ්ඩායමට කඩුලු 4ක ජයක්...!!#LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #Cricket #WinTogether #SriLanka #Season2 #T20cricket pic.twitter.com/uEBirKDUMl
இதில் நேற்று இரவு நடந்த போட்டியில் கண்டி வாரியர்ஸ் - கலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.முதலில் பேட்டிங் செய்த கண்டி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அகமது சேசாத் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 144 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்ய தொடங்கியது கலே கிளாடியேட்டர்ஸ் அணி.அந்த அணியில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர் குணத்திலாகா 33 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.
இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தனஞ்செயா லக்ஷன் தேர்வு செய்யப்பட்டார்.
Tonight's Player of the match, Dhananjaya Lakshan. @GalleGladiators#LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #Cricket #WinTogether #SriLanka #Season2 #T20cricket #LankaPremierLeague #TheFutureisHere pic.twitter.com/a6RpiNHbwP
— LPL - Lanka Premier League (@LPLT20) December 7, 2021