லங்கா ப்ரீமியர் லீக் 2024: சூப்பர் ஓவரில் தம்புள்ளையை வீழ்த்தியது காலி!
2024 Lanka Premier League போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த 16-வது லீக் ஆட்டத்தில், சூப்பர் ஓவரில் Dambulla Thunders அணியை GalleTitans அணி வீழ்த்தியது.
கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற தம்புள்ளை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதனைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய காலி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய தம்புள்ளை அணியும் முழுவதுமாக 20 ஓவர்களை விளையாடி, 7 விக்கெட் இழந்த நிலையில் அதே 148 ஓட்டங்களை எடுத்து போட்டியை சமன் செய்தது.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவர்
முதலில் தம்புள்ளை அணி துடுப்பாட காலி அணியில் மஹீஷ் தீக்ஷனா சிறப்பாக பந்துவீசினார்.
இரண்டு முறை பந்தை Wide-ல் வீசினாலும், ஐந்து பந்துகளில் ஹென்ரிக்ஸ் மற்றும் முஹம்மது நபியின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி 6 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய காலி அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் சஹன் துடுப்பெடுத்து ஆடினர்.
தம்புள்ளை அணியில் நுவான் துஷாரா பந்துவீச, நான்கு பந்துகளில் 12 ஓட்டங்களை எடுத்து காலி அணி அபார வெற்றியடைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2024 Lanka Premier League, LPL2024, Galle Titans, Dambulla Thunders