2024 LPL: தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ் அபாரம்., Jaffna Kings அணியை வீழ்த்திய Kandy Falcons
2024 Lanka Premier League போட்டியில் செவ்வாய்கிழமை நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் Jaffna Kings அணிக்கு எதிராக Kandy Falcons வெற்றி பெற்றது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற LPL2024 லீக் ஆட்டத்தில் Kandy Falcons அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் Jaffna Kings அணியை வீழ்த்தியது.
நாணய சுழற்சியை வென்ற கண்டி பெல்கன்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜெவ்னா கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கண்டி பெல்கன்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து 3 விக்கட் இழப்பிற்கு 18.2 ஓவர்களில் 230 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.
கண்டி பெல்கன்ஸ் அணியில் அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 89 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 65 ஓட்டங்களும் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாய் நின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |