LPL 2024: ஞாயிற்றுக்கிழமை நடந்த 2 போட்டிகள்., Dambulla Thunders, Galle Titatns அணிகள் வெற்றி
இலங்கையின் 2024 Lanka Premier League போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 2 ஆட்டங்களில் Dambulla Thunders மற்றும் Galle Titatns அணிகள் வெற்றி பெற்றன.
Dambulla Thunders vs Colombo Strikers
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை முதலில் நடைபெற்ற LPL2024 லீக் ஆட்டத்தில் Dambulla Thunders அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் Colombo Strikers அணியை வீழ்த்தியது.
நாணய சுழற்சியை வென்ற DS அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய கொழும்பு அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தம்புள்ளை அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து இரண்டே விக்கட் இழப்பிற்கு 17.5 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது. குசல் பெரேரா அதிகபட்சமாக 80 ஓட்டங்களை அடித்தார்.
Kandy Falcons vs Galle Titans
இப்போட்டியை தொடர்ந்து, இதே ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் Kandy Falcons மற்றும் Galle Titans அணிகளுக்கு இடையே மற்றொரு ஆட்டம் நடைபெற்றது.
இப்போட்டியில், காலி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 176 ஓட்டங்கள் எடுத்து கண்டி அணியை வென்றது.
முதலில் களமிறங்கிய கண்டி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய காலி அணி 4 விக்கேட் இழப்புடன் 17.1 ஓவரில் 176 ஓட்டங்களை எடுத்து போட்டியில் வெற்றிபெற்றது.
காலி அணியில் Tim Seifert அதிகபட்சமாக 86 ஓட்டங்களைக் குவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kandy Falcons, Galle Titans, Dambulla Thunders Colombo Strikers, 2024 Lanka Premier League