ரிஷாப் பண்ட்டிற்கு 24 லட்சம் அபராதம்! நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக சிக்கிய LSG
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவான ஓவர் விகிதத்தை பராமரித்ததற்காக, லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணித்தலைவர் ரிஷாப் பண்ட்டிற்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஓவர் விகித குற்றம்
வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி இரண்டாவது முறையாக ஓவர் விகிதம் குற்றத்தில் சிக்கியது.
அதாவது, மெதுவான ஓவர் விகிதத்தை பராமரித்ததற்காக (குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசவில்லை) அணித்தலைவர் ரிஷாப் பண்ட்டிற்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம்
மேலும், Impact வீரர் உட்பட விளையாடும் XIயின் மற்ற வீரர்களுக்கு போட்டியின் நடத்தை விதிகளின்படி, INR 6 லட்சம் அல்லது அந்தந்த போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
ஐபிஎல் விதிமுறையின் கீழ் இரண்டாவது முறையாக LSG அணி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |