கடைசி ஓவரில் கைமாறிய வெற்றி? ராஜஸ்தானை வீழ்த்தி லக்னோ அபாரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலக்கை நிர்ணயித்த லக்னோ
ஜெய்ப்பூரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் முன்கள வீரர்களான நிக்கோலஸ் பூரன், கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.
Abdul Samad appreciation post 💙 pic.twitter.com/oj1FJWQVUd
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2025
ஆனால் இம்பாக்ட் வீரராக வந்த ஆயுஷ் பதோனி, மார்க்ரமுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து 76 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
அபாரமாக ஆடிய மார்க்ரம் 45 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த பதோனி 34 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்கள் எடுத்தது.
Target set, ab shuru hota hai trap ✊ pic.twitter.com/THtD88iwsy
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2025
லக்னோ த்ரில் வெற்றி
181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கம் கொடுத்ததோடு 74 ஓட்டங்கள் விளாசினார்.
இம்பாக்ட் வீரராக களமிறங்கிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி 34 ஓட்டங்கள் எடுத்தார்.
Three back-to-back fifties for Jaiswal! 🔥💗 pic.twitter.com/5LSeBRE2aw
— Rajasthan Royals (@rajasthanroyals) April 19, 2025
இருப்பினும், பின்னர் வந்த நிதிஷ் ராணா 8 ஓட்டங்களிலும், ரியான் பராக் 39 ஓட்டங்களிலும், துருவ் ஜுரேல் 6 ஓட்டங்களிலும், ஹெட்மெயர் 12 ஓட்டங்களிலும், ஷுபம் டூபே 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
கிட்டத்தட்ட ராஜஸ்தான் ராயல் அணியின் கையில் வெற்றி இருந்த நிலையில், லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானின் பெரும் அதிர்ச்சியை வழங்கினார்.
Woh jeet wali chamak 😎 pic.twitter.com/mVhGY2FtUw
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2025
குறிப்பாக கடைசி ஓவரில் ஹெட்மெயரின் விக்கெட்டை வீழ்த்தி, ராஜஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் மட்டுமே ராஜஸ்தான் அணியால் குவிக்க முடிந்ததால் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |