அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ்! 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் RCB-யை வீழ்த்திய LSG
ஐபிஎல்லில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் விளையாடிய லக்னோ அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த லக்னோ
ஐபிஎல்லின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி சிறப்பாக விளையாடி 209 ஓட்டங்கள் குவித்தது.

மூன்று முறை மழை குறுக்கிட்டதால் போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது அத்துடன் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பெங்களூரு அணிக்கான இலக்கு 213 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
லக்னோ அணில் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 9 சிக்சர்கள் விளாசி 111 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
தடுமாறிய பெங்களூரு அணி
மழையின் காரணமாக பிட்ச் மோசமடையே பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

கேப்டன் ரஜத் படித்தார் பொறுப்புடன் விளையாடி 61 ஓட்டங்கள் குவித்தார். பின்னர் வந்த டிம் டேவிட் 40 ஓட்டங்கள் குவித்தார்.
இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 19 ஓவர்கள் முடிவில் 203 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
அத்துடன் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி அடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |