ஆரம்பிக்கலாமா சென்னை? CSKவுக்கு சவால் விட்டு லக்னோ அணி ட்வீட்
லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் CSK அணியை எதிர்கொள்ள தயாராகும் வீடியோவை பகிர்ந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த 19ஆம் திகதி நடந்த போட்டியில் CSK அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியுற்றது.
அதற்கு இன்றையப் போட்டியில் சென்னை அணி பழிதீர்க்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
ஆரம்பிக்கலாமா, சென்னை? ?? pic.twitter.com/l6xKl82wYb
— Lucknow Super Giants (@LucknowIPL) April 23, 2024
அதில் சென்னை குறித்து லக்னோ அணியின் துணை பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் பேசுவதும், அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதும் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ''ஆரம்பிக்கலாமா, சென்னை?'' என்ற டேக்லைனையும் LSG குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் நாங்கள் தயார் தான் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |