இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் நியமனம்
இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஜூன் 30-ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் பாதுகாப்பு அமைச்சகம் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது.

யார் இந்த தீரஜ் சேத்?
தீரஜ் சேத், 1986-ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் கவசப் படைப் பிரிவில் (Armoured Corps - 2nd Lancers) அதிகாரியாக தனது சேவையைத் தொடங்கினார்.
தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், சுதர்சன் சக்ரா கார்ப்ஸ் தளபதியாகவும், டெல்லி பகுதியின் ஜெனரல் ஆபிசர் கமாண்டராகவும் பணியாற்றியுள்ளார்.
இராணுவத்தின் உத்திசார் திட்டமிடல், நவீனமயமாக்கல் பணிகளில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்தியாவில் மட்டுமன்றி பிரான்ஸ் பாரிஸ் இராணுவக் கல்லூரி மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்படை முதுகலை கல்லூரியில் சர்வதேச இராணுவப் பயிற்சிகளை பெற்றுள்ளார்.
துணைத் தளபதியாக இருந்த காலத்தில், இராணுவத்தின் திறன் மேம்பாடு மற்றும் வருங்காலப் போர்க்களத் தேவைகளுக்கேற்ப படைகளை வடிவமைப்பதில் இவர் சிறப்பாக செயல்பட்டார்.
இவரது அனுபவமும், திறமையும் இந்திய இராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |