தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் DNA பரிசோதனை சாத்தியமா..! இலங்கையின் அரசியல்வாதி கூறும் உண்மை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக காண்பிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு வீடியோ வெளியாகி இருந்தது.
மாவீரர் நாளான கடந்த நவம்பர் 27ஆம் திகதி குறித்த காணொளியை உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.
10 வருடத்திற்கு முன் துவாரகா என்னிடம் கதைத்தார். அண்ணா, இன்னும் எதுவும் முடியவில்லை. என்னுடைய தொலைபேசியும் உங்களுடைய தொலைபேசியும் ஒட்டுக்கேட்க முடியும். நீங்கள் லண்டன் வந்தால் நேரில் உங்களை சந்திக்கிறேன் என கூறினார்.
இதையடுத்து, அவரின் பெரியம்மாவான அருணா தொலைபேசியின் ஊடாகவும் என்னிடம் கதைத்தார்.
துவாரகவாக இருந்தால், கண்டிப்பாக அவர் தனது தந்தை வழி உறவினர்களிடம் இருந்து DNA மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் இந்த வீடியோவில் தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |