புதிய ஐபிஎல் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்!
முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் லக்னோ அணியின் ஆலோகசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக களம் இறங்குகின்றன.
இதனிடையே, ஜாம்பவான் ஆண்டி ப்ளவர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதை நேற்று லக்னோ அணியின் உரிமையார் சஞ்சீவ் கோயங்கா உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் கவும் கம்பீர் அணியின் ஆலோசகராக லக்னோ அணி இன்று நியமித்துள்ளது.
இதுகுறித்து கம்பீர் கூறியதாவது, அந்த அருமையான வாய்ப்பளித்த கோயங்கா மற்றும் ஆர்பிஎஸ்ஜி குழுமத்திற்கு மிக்க நன்றி.
தொடரை வெல்ல வேண்டும் என்ற தீ எனக்குள் இன்னும் இருக்கிறது என கூறியுள்ளார்.
காம்பீரை வரவேற்ற லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அவருடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறினார்.
40 வயதான கம்பீர், இந்திய அணிக்காகக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.