ரயில் பாதையில் கிடந்த இளம்பெண்ணின் உடல்: விசாரணையில் தெரியவந்த திடுக் தகவல்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ரயில் பாதை ஒன்றில் ஒரு பதின்மவயதுப்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் திடுக்கிடவைக்கும் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போன பதின்மவயதுப் பெண்
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த ஷீத்தல் (16) என்னும் பெண் கடந்த 13ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

மகளைக் காணாத ஷீத்தலின் தாயான பிங்கி, ஜனவரி மாதம் 16ஆம் திகதி, பொலிசில் புகாரளித்ததுடன், அன்ஷூ கௌதம் (20) என்னும் இளைஞர் தன் மகளை திருமணம் செய்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்கலாம் தெரிவித்துள்ளார்.
ரயில் பாதையில் கிடந்த இளம்பெண்ணின் உடல் பொலிசார் கௌதமை தேடிவந்த நிலையில், ஷீத்தலின் உயிரற்ற உடல் ரயில் பாதை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்னவென்றால், ஷீத்தல் கௌதமுடன் பழகிவந்த அதே நேரத்தில், அவருக்குத் தெரியாமல் ஆஷிக் யாதவ் (20) என்னும் இளைஞருடன் பழக முயன்றுள்ளார்.
ஆனால், கௌதமும் ஆஷிக்கும் நண்பர்கள் என்பது ஷீத்தலுக்குத் தெரியாது. ஆக, தங்களுக்கு துரோகமிழைத்த ஷீத்தலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள் இருவரும்.
அதன்படி, தன்னை சந்திக்க வருமாறு கௌதம் ஷீத்தலை அழைக்க, அவர் செல்ல, ஓரிடத்தில் அவருக்காக காத்திருந்த கௌதம், ஆஷிக், அவர்களுடைய நண்பர்களான ரிஷு யாதவ் (20) மற்றும் வைபவ் சிங் ராஜ்புத் (23) ஆகிய நால்வருமாக சேர்ந்து ஷீத்தலை தாக்கி, பின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்கள்.
ஷீத்தல் தானே தன் உயிரை மாய்த்துக்கொண்டதுபோல் காட்டுவதற்காக அவரது உடலை ரயில் பாதை ஒன்றில் போட்டுவிட்டு, ஷீத்தல் உட்பட அனைவருடைய மொபைல் போன்களையும் அடித்து நொறுக்கி வீசிவிட்டிருக்கிறார்கள்.
ஷீத்தலில் தாயான பிங்கி, கௌதம் மீது புகாரளித்திருந்த நிலையில், 26ஆம் திகதி குற்றவாளிகள் நால்வரும் பொலிசில் சிக்கியுள்ளார்கள். பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |