கே.எல்.ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல்: மும்பையை மொத்தமாக நொறுக்கிய லக்னோ

Lucknow Super Giants Mumbai Indians IPL 2022
By Arbin Apr 24, 2022 06:46 PM GMT
Report

கே.எல்.ராகுல் மற்றும் குருணால் பாண்ட்யா ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் லக்னோ அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அணித்தலைவர் ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர்.

பும்ரா பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டி காக் 9 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ராகுல் அரைசதம் கடந்தார்.

கே.எல்.ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல்: மும்பையை மொத்தமாக நொறுக்கிய லக்னோ | Lucknow Super Giants Beat Mumbai Indians

பொல்லார்ட் பந்தில் 22 ஓட்டங்களில் அவுட்டாகி மனிஷ் பாண்டே மீண்டும் ஒருமுறை லக்னோ ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் குருனால் பாண்டியா வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

அதை தொடர்ந்து தீபக் ஹூடா-வும் 10 ஓட்டங்களில் நடையைக் கட்ட மறுமுனையில் ராகுல் தொடர்ந்து அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 61 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது மும்பைக்கு எதிராக அவரது 2-வது சதமாகும்.

கே.எல்.ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல்: மும்பையை மொத்தமாக நொறுக்கிய லக்னோ | Lucknow Super Giants Beat Mumbai Indians

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்தது. இதை தொடர்ந்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ரவி பிஷ்னாய் சுழலில் இஷான் கிஷன் 8 ஓட்டங்களில் வெளியேற அவரை தொடர்ந்து வந்த பிரெவிஸ் 3 ஓட்டங்களில் அறிமுக வீரர் மொஹ்சின் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கே.எல்.ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல்: மும்பையை மொத்தமாக நொறுக்கிய லக்னோ | Lucknow Super Giants Beat Mumbai Indians

ஒரு முனையில் சிறப்பாக விளையாடிவந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா குருனால் பாண்டியா பந்துவீச்சில் 39 ஓட்டங்களில் வெளியேறினார். மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களம் புகுந்த சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒரு கட்டத்தில் வெற்றிப்பாதையை நோக்கி சென்ற மும்பை அணி தடுமாற தொடங்கியது. இருப்பினும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் பொல்லார்ட் - திலக் வர்மா ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிவந்த திலக் வர்மா 38 ஓட்டங்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

கே.எல்.ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல்: மும்பையை மொத்தமாக நொறுக்கிய லக்னோ | Lucknow Super Giants Beat Mumbai Indians

பொல்லார்டு 19 ஓட்டங்களில் சுருண்டார். இறுதி ஓவரில் மேலும் 3 விக்கெட்கள் சாய மும்பை அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் லக்னோ அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் மும்பை அணி 8-வது தோல்வியை சொந்த மைதானத்தில் சந்தித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US