அணியின் லோகோவை வெளியிட்ட லக்னோ அணி - அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் புதிதாக பங்கேற்கும் லக்னோ அணி புதிய லோகோவுடன் கூடிய அணியின் கொடியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதோடு வீரர்களுக்கான மெகா ஏலமும் நடக்கவுள்ளது.
இதில் புதிதாக இணையும் அணிகளான சஞ்சீவ் கோயங்கா உரிமையாளரான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், பயிற்சியாளராக ஆன்டி பிளஃவரும், மெண்டராக கவுதம் கம்பீரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த அணி மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் அகிய இருவரையும் தக்க வைத்துள்ளது. இந்நிலையில் லக்னோ அணியானது தங்களது அணியின் லோகோவை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளது.
அதனைப் பார்த்த அனைவரும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்து விட்டனர். காரணம் இந்த லோகோவில் கருடனை அடிப்படையாகக் கொண்டு இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறங்களையும் கொண்டு அந்த கருடப் பறவை அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு அணியின் பெயரையும் சேர்த்து இடையில் ஒரு கிரிக்கெட் பேட் இடம்பெற்றுள்ளது போன்ற அமைப்புடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த லோகோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Here's the story behind our identity. ?#LucknowSuperGiants #IPL pic.twitter.com/4qyuFeNgsR
— Lucknow Super Giants (@LucknowIPL) January 31, 2022