குஜராத் டைட்டன்ஸ் போராடி தோல்வி: லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆறுதல் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் சீசனின் 64வது போட்டி தற்போது குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்றது.
இந்த முக்கியமான மோதலில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கிய நிலையில், . இருவரும் அதிரடியான தொடக்கம் அளித்தனர்.
ஸ்டோய்னிஸ் 9.5 ஓவர்களில் 91 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்கும் வரை இந்த கூட்டணி சிறப்பாகத் தொடர்ந்தது.
பின்னர் மிட்செல் மார்ஷுடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார்.
குறிப்பாக, மார்ஷ் 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 117 ஓட்டங்கள் குவித்து அற்புதமான இன்னிங்ஸை நிறைவு செய்தார்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 235 ஓட்டங்கள் குவித்தது.
லக்னோ வெற்றி
236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
தொடக்க வீரர் சாய் சுதர்சன் 21 ஓட்டங்களிலும், கேப்டன் சுப்மன் கில் 35 ஓட்டங்களிலும், ஜாஸ் பட்லர் 33 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
You can't keep Rathi out of this team 😂pic.twitter.com/kvmvGJTJSF
— Lucknow Super Giants (@LucknowIPL) May 22, 2025
இதையடுத்து, நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரதர்போர்டு மற்றும் ஷாருக் கான் ஜோடி அதிரடியாக விளையாடி நம்பிக்கை அளித்தது.
இந்த ஜோடி 86 ஓட்டங்கள் சேர்த்து, குஜராத் அணியை வெற்றிப் பாதைக்கு திருப்ப முயற்சித்தது.
ஆனால், ரதர்போர்டு 38 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஷாருக் கான் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இருப்பினும், குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது, தோல்வியை தழுவியது.
இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |