மகர ராசியில் ராகு பெயர்ச்சி... தொடர் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினர்
Rahu Ketu Peyarchi
Horoscope
Astrology
By Manchu
Rahu Transit these Zodiac Very Lucky: மகர ராசியில் ராகு பெயர்ச்சியடைவதால் தொடர்ந்து அதிர்ஷ்டத்தினை பெறும் 3 ராசியினரைக் குறித்து இந்த பதிவில்தெரிந்து கொள்வோம்.
ராகு பெயர்ச்சி
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேது பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இன்று ராகு கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த பெயர்ச்சியினால் அடுத்த 18 மாதங்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினராக மூன்று ராசியினர் உள்ளனர்.
ராகு பெயர்ச்சியின் போது எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறைந்து, வருமானம் அதிகரிக்கவும் செய்கின்றது. இந்த அதிர்ஷ்ட பலனை அடையும் மூன்று ராசியினர் குறித்து தெரிந்து கொள்வோம்.

சிம்மம்
- சிம்ம ராசியில் ஆறாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் எதிரிகளை வெல்லும் வாய்ப்புகள் உருவாகுமாம்.
- நீண்ட நாட்களாக எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வதுடன், சிலர் ஆதரவாகவும் மாறுவார்கள்.
- நெடு நாட்களாக எதிர்கொண்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பணியிடத்திலும் சாதகமான சூழல் ஏற்படும்.
- நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
- நிலுவையில் உள்ள பணம் கைக்கு வருவதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்பும் கிடைக்கும்.
- நீண்ட காலமாக இருந்த உடல்நலத்தில் ஆரோக்கியம், மனநிம்மதி பெறுவீர்கள்.

விருச்சிகம்
- விருச்சிக ராசியில் மூன்றாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தினை ஏற்படும்.
- நீண்ட நாளாக இருந்த குடும்ப பிரச்சனை படிப்படியாக குறைவதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் கிடைக்கும்.
- புதிய நட்புகள் கிடைப்பதுடன், உடன் பிறந்தவர்களிடையே கருத்து வேறுபாடு நீங்கும்.
- நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும். முயற்சி அனைத்தும் வெற்றியாகும்.
- எதிர்பாராத பணவரவு கிடைப்பதுடன், நீண்ட நாள் கனவு நனவாகும். எதிர்கால திட்டத்தினை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.

மீனம்
- மீன ராசியில் ராகு பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வருமானம், ஆசை நிறைவேறும்.
- திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
- நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் கைமூடுவதுடன், திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
- தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைப்பதுடன், சாதகமான சூழலும் கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்க புதிய வழி உருவாவதுடன், எதிர்பாராத பண வரவு, பொருளாதார வரவு கிடைக்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US